< Back
சினிமா செய்திகள்
சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
சினிமா செய்திகள்

சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தினத்தந்தி
|
3 Jan 2024 6:49 PM IST

நடிகர் சூரி, இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சென்னை,

நடிகர் சூரி தற்போது இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். சூரியுடன், சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கின்றனர்.

மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் கும்பகோணத்தில் பூஜையுடன் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் சமுத்திரக்கனி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்