< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
|29 Feb 2024 6:26 PM IST
அகிரன் மோசஸ் இயக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சென்னை,
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நடிக்கும் புதிய திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பசுபதி, மலையாள நடிகர் ஸ்ரீநாத்பாசி, லிங்கேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இயக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.
இந்த படப்பிடிப்பை இயக்குனர் பா.ரஞ்சித் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.