< Back
சினிமா செய்திகள்
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
சினிமா செய்திகள்

'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தினத்தந்தி
|
2 Jun 2024 10:55 PM IST

'சூர்யா 44' படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ஷபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்