< Back
சினிமா செய்திகள்
சுனில் ஷெட்டி நடிக்கும் ஹண்டர் 2 தொடரின் படப்பிடிப்பு தொடக்கம்
சினிமா செய்திகள்

சுனில் ஷெட்டி நடிக்கும் 'ஹண்டர் 2' தொடரின் படப்பிடிப்பு தொடக்கம்

தினத்தந்தி
|
27 Aug 2024 1:06 PM IST

'ஹண்டர் 2' தொடர் எட்டு பாகங்களை கொண்டதாக உருவாக உள்ளது.

மும்பை,

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சுனில் ஷெட்டி. இவர் தமிழில், நடிகர் ஷாம் நடித்த 12பி என்ற படத்தில் நடித்து உள்ளார். இவர் தற்போது 'ஹண்டர் 2' என்ற ஆக்சன் திரில்லர் தொடரில் நடித்து வருகிறார். இது எட்டு பாகங்களை கொண்ட தொடராக உருவாக உள்ளது.

சரேகாமா இந்தியா லிமிடெட் தயாரிக்கும் இத்தொடரினை பிரின்ஸ் திமான் மற்றும் அலோக் பத்ரா இயக்குகின்றனர். இந்த தொடரில் ஈஷா தியோல், பர்கா பிஷ்ட் சென்குப்தா, ராகுல் தேவ், கரண்வீர் சர்மா மற்றும் பவன் சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இந்தநிலையில், ஹண்டர் 2 தொடரின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை உறுதிபடுத்தும் விதமாக நடிகர் சுனில் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இதற்கிடையில் இவர், 'வெல்கம் 3' முதல் 'தி லெஜண்ட் ஆப் சோம்நாத்' போன்ற வரவிருக்கும் படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்