சத்யராஜ் நடித்துள்ள 'வெப்பன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
|சத்யராஜ் நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சென்னை,
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வெப்பன்' . இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் சூப்பர் ஹியூமன் கதை கொண்ட படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.