< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் - போஸ்டர் வெளியிட்ட படக்குழு
|29 April 2024 1:43 PM IST
'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
சென்னை,
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜய்யின் படத்தை இயக்குகிறார்.
படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.
இந்த படத்திற்கு 'ரெட்ட தல' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு நாயகிகளாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.