< Back
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்
சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
4 Oct 2023 12:11 PM IST

ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

சென்னை,

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு பெயர் வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து 'தலைவர் 170' திரைப்படத்திலும் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்சன் அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்