< Back
சினிமா செய்திகள்
நிவின் பாலி நடிக்கும் தாரம் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
சினிமா செய்திகள்

நிவின் பாலி நடிக்கும் 'தாரம்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தினத்தந்தி
|
3 Nov 2022 5:46 PM IST

நிவின் பாலி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

மலையாள நடிகர் நிவின் பாலி 'நேரம்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'பிரேமம்' மலையாள படம் தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்குனர் ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை அஞ்சலி, நடிகர் சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இதனிடையே நிவின் பாலி நடித்துள்ள 'சாட்டர்டே நைட்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்காக நிவின் பாலி தனது உடல் எடையை அதிகரித்திருந்தார்.

இந்த சூழலில் நிவின் பாலி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'தாரம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நிவின் பாலி மீண்டும் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்