< Back
சினிமா செய்திகள்
மம்முட்டி - விநாயகன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
சினிமா செய்திகள்

மம்முட்டி - விநாயகன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தினத்தந்தி
|
29 Sept 2024 1:48 PM IST

இந்த படத்தில் நடிகர் மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் பிருத்விராஜ், ஜோஜு ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலக, விநாயகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தில் விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்முட்டி நடிக்கிறார். 'புழு, பிரம்மயுகம்' போன்ற படத்தில் வில்லனாக நடித்து அசத்திய மம்முட்டி, மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது. இந்த நிலையில், இதை அதிகாரப்பூர்வமாக மம்மூட்டி கம்பெனி நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்