< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
|1 May 2024 10:03 PM IST
'ரிவால்வர் ரீட்டா' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
சென்னை,
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
கடந்த ஆண்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.