இறுதிக்கட்டத்தை நெருங்கிய 'டிமான்டி காலனி-2' படப்பிடிப்பு
|'டிமான்டி காலனி-2' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தின் 98 சதவீத படப்பிடிப்புப் பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில காட்சிகளே மீதியிருப்பதாகவும், அதுவும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சை.கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வருகிற 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.