< Back
சினிமா செய்திகள்
தனுஷ் இயக்கி நடிக்கும் டி50 படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!
சினிமா செய்திகள்

தனுஷ் இயக்கி நடிக்கும் 'டி50' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!

தினத்தந்தி
|
5 July 2023 5:40 PM GMT

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 'டி50' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சென்னை,

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் 50-வது படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'டி50' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை நடிகர் தனுஷே இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்