< Back
சினிமா செய்திகள்
The shooting of Arjun Das and Aditi Shankars film shoot wrap
சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தினத்தந்தி
|
11 Sept 2024 8:17 PM IST

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். 'குட் நைட் ' மற்றும் 'லவ்வர்' திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு 'புரொடக்சன் நம்பர் 4' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

ஹேஷம் அப்துல் வாகப் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதிதி ஷங்கர் ஏற்கனவே கார்த்தியின் விருமன், சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும், அதர்வாவின் சகோதரரான ஆகாஷ் முரளியுடன் இணைந்து நேசிப்பாயா எனும் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்