< Back
சினிமா செய்திகள்
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவு
சினிமா செய்திகள்

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தினத்தந்தி
|
20 Aug 2024 6:55 AM GMT

ஐதராபாத்தில் நடைபெற்ற விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

ஐதராபாத்,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்தநிலையில், இந்த படத்தின் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் நிலுவையில் இருந்தது. இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது. அதன்பிறகு படத்தின் புரொடக்சன் பணிகள் நடைபெற உள்ளது. அதனை உறுதிபடுத்தும் வகையில் படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அஜித் விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்