< Back
சினிமா செய்திகள்
ஆதி நடிக்கும் சப்தம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
சினிமா செய்திகள்

ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

தினத்தந்தி
|
27 Sept 2023 10:43 PM IST

ஆதி நடிக்கும் 'சப்தம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் அறிவழகன். இவர் தற்போது 'சப்தம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனர் அறிவழகன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஹாரர், திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஈரம்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்