< Back
சினிமா செய்திகள்
இரண்டாவது பாடலை வெளியிட்ட திருவின் குரல் படக்குழு
சினிமா செய்திகள்

இரண்டாவது பாடலை வெளியிட்ட 'திருவின் குரல்' படக்குழு

தினத்தந்தி
|
14 April 2023 6:21 AM IST

அருள்நிதி நடித்துள்ள 'திருவின் குரல்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் அருள்நிதி தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள 'திருவின் குரல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார். ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'திருவின் குரல்' படத்தின் இரண்டாவது பாடலான 'வா தாரகையே' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

பாடலாசிரியர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் அபிஜித் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைராகி வருகிறது. 'திருவின் குரல்' திரைப்படம் ஏப்ரல் 14-ந்தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் செய்திகள்