விமல் நடிக்கும் 'சார்' படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு
|விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தில் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார்.இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கிறார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பை சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது "சார்" என மாற்றப்பட்டு இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் பூவாசனை எனும் இரண்டாவது பாடல் நாளை (ஜூலை 26) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் விவேகாவின் வரிகளில் ஷான் ரோல்டன் பாடியுள்ள இந்த பாடலை நடிகர் அதர்வா மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.