< Back
சினிமா செய்திகள்
விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!
சினிமா செய்திகள்

விக்ரம் பிரபு நடித்துள்ள 'ரெய்டு' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!

தினத்தந்தி
|
2 Nov 2023 4:58 PM IST

'ரெய்டு' திரைப்படம் வருகிற 10-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார், தனஞ்சயா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'டகரு' படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அனந்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.கே.கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரெய்டு' திரைப்படம் வருகிற 10-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 'ரெய்டு' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான 'அழகு செல்லம்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை ஹரிசரண், புவனா ஆனந்த் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்