< Back
சினிமா செய்திகள்
சூது கவ்வும் 2 படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'சூது கவ்வும் 2' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

தினத்தந்தி
|
23 April 2024 1:53 AM IST

'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார்.

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. 'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்துக்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைக்கிறார். இக்னேஷியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் 'சூது கவ்வும் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி 'மண்டைக்கு சூரு ஏறுதே' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. கர்ணன் கணபதி எழுதியுள்ள இந்த பாடலை, கர்ணன் கனபதி, பிரேம்ஜி அமரன், ஸ்டீபன் செக்கரியா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்