மோகன்லால் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!
|'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது.
மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிஜோ ஜோஸ் 'ஜல்லிக்கட்டு', 'அங்கமாலி டைரிஸ்', 'சுருளி', 'நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற பல படங்களை இயக்கி கவனம் பெற்றார். இவர் தற்போது மோகன்லால் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'ராக்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் மோகன்லால் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.