< Back
சினிமா செய்திகள்
கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

கயல் ஆனந்தி நடித்துள்ள 'மங்கை' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

தினத்தந்தி
|
21 Feb 2024 8:30 AM GMT

'மங்கை' திரைப்படம் வருகிற மார்ச் 1-ந்தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகை 'கயல்' ஆனந்தி தற்போது இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'மங்கை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷி, சாம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'மங்கை' படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'யான முட்ட' என்ற பாடல் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை சாக்ஷி ஹரேந்திரன், ஆனந்தி பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் மார்ச் 1-ந்தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்