'தி ராக்' முதல் 'அண்டர்டேக்கர்' வரை - ஹாலிவுட் படங்களில் வில்லனாக நடித்த மல்யுத்த நட்சத்திரங்கள்
|மல்யுத்த போட்டியின் மூலம் புகழ் பெற்ற பல வீரர்கள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.
வாஷிங்டன்,
மல்யுத்த நட்சத்திரங்கள் பலர் ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார்கள். அதில் சிலர் ஆக்சன் ஹீரோக்களாகவும் சிலர் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்கள். தற்போது 'தி ராக்' முதல் 'அண்டர்டேக்கர்' வரை ஹாலிவுட் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மல்யுத்தநட்சத்திரங்களைப் பற்றி காணலாம்.
1. 'தி ராக்'
பிரபல மல்யுத்த வீரர் டுவைன் "தி ராக்" ஜான்சன், பல ஹாலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால், இவர் சினிமாவுக்கு ஒரு வில்லனாகதான் அறிமுகமாகியிருக்கிறார். கடந்த 2001-ம் ஆண்டு வெளியான 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஸ்கார்பியன் கிங்காக நடித்தார். அதில் குறுகிய நேரம் மட்டுமே வந்திருந்தாலும், ஜான்சனின் அச்சுறுத்தும் நடிப்பு சிறப்பாக அமைந்தது.
2. 'டிரிபிள் எச்'
பிரபல மல்யுத்த வீரர் டிரிபிள் எச். இவர் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான பிளேட் டிரினிட்டி படத்தில் ஜார்கோ கிரிம்வுட் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
3. 'டேவ் பாடிஸ்டா'
கடந்த 2015-ம் ஆண்டு சாம் மென்டிஸ் இயக்கத்தில் வெளியான படம் ஸ்பெக்டர். இப்படத்தில் பிரபல மல்யுத்த வீரர் டேவ் பாடிஸ்டா ஹின்ஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
4. 'ஸ்டீவ் ஆஸ்டின்'
கடந்த 2007-ம் ஆண்டு டோரி முசெட், வின்னி ஜோன்ஸ், ரிக் ஹாப்மேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தொடர் தி கண்டெம்ண்டு. இதில் பிரபல மல்யுத்த வீரர் ஸ்டீவ் ஆஸ்டின், ஜாக் கான்ராட் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
5. 'அண்டர்டேக்கர்'
பர்ட் கென்னடி இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் சபர்பன் கமாண்டோ. இதில், பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர், ஹச் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.