< Back
சினிமா செய்திகள்
சந்திரமுகி 2  படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!
சினிமா செய்திகள்

'சந்திரமுகி 2' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!

தினத்தந்தி
|
8 Sept 2023 5:47 PM IST

தொழில்நுட்ப காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது படக்குழு தரப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28-ஆம் தேதி விஜய் ஆண்டனியின் 'ரத்தம்', ஜெயம்ரவியின் 'இறைவன்', ஹரீஷ் கல்யானின் 'பார்கிங்', சித்தார்த்தின் 'சித்தா' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்