< Back
சினிமா செய்திகள்
எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
11 Oct 2024 6:16 PM IST

அசோக் செல்வன் நடித்துள்ள 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திருமலை தயாரித்துள்ள இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்