< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
|24 Oct 2023 12:37 AM IST
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜா ரா கண்டி' என்ற பாடல் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.