< Back
சினிமா செய்திகள்
பரபரப்பாக நடைபெறும் ரீ-ரிலீஸ் வேலைகள்... இன்று வெளியாகிறது ஆளவந்தான் படத்தின் டிரைலர்...!
சினிமா செய்திகள்

பரபரப்பாக நடைபெறும் ரீ-ரிலீஸ் வேலைகள்... இன்று வெளியாகிறது ஆளவந்தான் படத்தின் டிரைலர்...!

தினத்தந்தி
|
2 Dec 2023 12:56 PM IST

வரும் டிசம்பர் 8-ந்தேதி 'ஆளவந்தான்' திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

சென்னை,

கடந்த 2001-ம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனிடையே, 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் மீண்டும் வெளியாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. படத்தின் ரீ-ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.

அதன்படி வரும் டிசம்பர் 8-ந்தேதி இந்த படத்தை உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆளவந்தான்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5.03 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "போராடப் பிறந்தவன்.. போர் குணம் மிகுந்தவன்.. ஆளவந்தான் டிரைலர் இன்று மாலை 5:03க்கு வெளியீடு" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்