< Back
சினிமா செய்திகள்
கதாநாயகனான ராட்சசன் வில்லன்
சினிமா செய்திகள்

கதாநாயகனான 'ராட்சசன்' வில்லன்

தினத்தந்தி
|
16 Dec 2022 10:49 AM IST

ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் வில்லன் நடிகராக வந்து மிரட்டிய சரவணன், `குற்றப்பின்னணி' படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.

இதில் தாட்சாயினி, சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்.பி.இஸ்மாயில் இயக்கி உள்ளார். இவர் `வாங்க வாங்க', `ஐ.ஆர்.8' ஆகிய படங்களை ஏற்கனவே இயக்கி உள்ளார். நாட்டில் நடை பெறும் பெண்கள் சார்ந்த குற்றங்கள், அதன் மூலம் குடும்பம் மற்றும் தனி மனித வாழ்க்கையில் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்ற கதையம்சத்தில் சஸ்பென்ஸ் திகில் படமாக தயாராகிறது. படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆயிஷா, அகமல் தயாரித்துள்ளனர். இசை: ஜித், ஒளிப்பதிவு: சங்கர் செல்வராஜ்.

மேலும் செய்திகள்