'தி கோட்' படத்தின் புரமோசன் பணிகள் தீவிரம்
|'தி கோட்' படத்தின் புரமோசன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
சென்னை,
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் 'தி கோட்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படத்தின் டிரெய்லர் 50 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை கடந்து டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
சமீபத்தில், 'தி கோட்' படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபு 'தி கோட் திரைப்படம் என்னுடைய திரைவாழ்வில் பெரிய படம் இதுதான் என்றார். இப்படம் நிச்சயம் ரசிகர்கள் அனைவரையும் கவரும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் இப்படம் இருக்கும்' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் 'தி கோட்' படத்தின் படக்குழுவினர் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பின்னர், யூடியூப் சேனல்களுக்கு நேர்காணலின் போது பேட்டி கொடுக்க உள்ளனர். இந்தநிலையில் அடுத்த வாரம் படம் ரிலீஸ் ஆகவிருப்பதால், தற்போது புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.