< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
வைரலாகும் 'கங்குவா' பட நாயகியின் புகைப்படங்கள்
|11 May 2024 8:28 AM IST
நடிகை திஷா பதானி ‘கங்குவா’ திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமாக உள்ளார்.
சென்னை,
பாலிவுட்டில் பிசியான நாயகியாக வலம் வருபவர் திஷா பதானி. தமிழில் சூர்யாவின் 'கங்குவா' மூலமாக அறிமுகமாக இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கல்கி ஏடி 2898' படத்திலும் நடித்துள்ளார்.
திஷா பதானி சமூகவலைதளப் பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களைப் பகிர்ந்து வருவார். அந்த வகையில், திஷா பதானி தற்போது பிகினி உடையில் கடற்கரையில் தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.