< Back
சினிமா செய்திகள்
வாயில் நெருப்புடன் கூடிய குச்சியை பிடித்தபடி அஜித்தை வரைந்த ஓவியர்
சினிமா செய்திகள்

வாயில் நெருப்புடன் கூடிய குச்சியை பிடித்தபடி அஜித்தை வரைந்த ஓவியர்

தினத்தந்தி
|
19 March 2024 11:58 AM IST

வாயில் நெருப்புடன் கூடிய நீண்ட குச்சியை பிடித்தபடி அஜித்தின் படத்தை ஓவியர் ஒருவர் வரைந்துள்ளார்.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வருகின்றார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தசூழலில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அஜித்தின் 63வது படத்தை 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார் .மேலும், இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. 'குட் பேட் அக்லி'படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், 'குட் பேட் அக்லி' டைட்டில் வெளியானதை கொண்டாடும்விதமாக, வாயில் நெருப்புடன் கூடிய நீண்ட குச்சியை பிடித்தபடி அஜித்தின் படத்தை ஓவியர் ஒருவர் வரைந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஓவியர் செல்வம். இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். தற்போது அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதற்கு மகிழ்ச்சி தெரிவித்து இதனை கொண்டாடும் விதமாக அஜித்தின் படத்தை தன் வாயில் நெருப்புடன் கூடிய நீண்ட குச்சியை பிடித்தபடி வரைந்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்