< Back
சினிமா செய்திகள்
சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு... ரசிகர்கள் ஏமாற்றம்...!
சினிமா செய்திகள்

'சித்தா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு... ரசிகர்கள் ஏமாற்றம்...!

தினத்தந்தி
|
21 Nov 2023 12:24 PM IST

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 'சித்தா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'. இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இதில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்புதான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே 'சித்தா' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படம் எப்போது வெளியாகும் என தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் 'சித்தா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற 28-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்