< Back
சினிமா செய்திகள்
தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!
சினிமா செய்திகள்

'தளபதி 68' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!

தினத்தந்தி
|
21 May 2023 3:17 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

'வாரிசு' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். 'மாஸ்டர்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் 'தளபதி 68' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்