< Back
சினிமா செய்திகள்
நடிகர் மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது - சரத்குமார்
சினிமா செய்திகள்

நடிகர் மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது - சரத்குமார்

தினத்தந்தி
|
8 Sept 2023 12:10 PM IST

நடிகர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

இயக்குனரும், பிரபல குணச்சித்திர நடிகருமான அன்பு நண்பர் மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

மேஜிக் பிரேம்ஸுடன் இணைந்து தயாரித்த 'புலிவால்' திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களை நினைவு கூறுகிறேன்.

வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கி மறைந்த அவரது பிரிவால் தீராத வேதனையில் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கலைத்துறையினர், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்