< Back
சினிமா செய்திகள்
ரன்பீர் கபூர்-ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அனிமல் படத்தின் புதிய வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

ரன்பீர் கபூர்-ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'அனிமல்' படத்தின் புதிய வீடியோ வைரல்

தினத்தந்தி
|
12 Jun 2023 12:47 AM IST

ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மும்பை,

'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக 'அனிமல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ந்தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'அனிமல்' படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த வீடியோவில் விரைவில் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Are you ready? We are just getting started! #2MonthsToAnimal#Animal in cinemas on 11th August! pic.twitter.com/nf0kXHLD6n

— Rashmika Mandanna (@iamRashmika) June 11, 2023 ">Also Read:

மேலும் செய்திகள்