< Back
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.!
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.!

தினத்தந்தி
|
9 Jun 2023 1:32 PM IST

'மாவீரன்' படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது.

சென்னை,

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்