ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் புதிய பாடல் வெளியானது..!
|ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள 'வீரன்' திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், இந்த படத்தின் மூன்றாவது பாடலான வீரன் திருவிழா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. முத்தமிழ் எழுதியுள்ள இந்த பாடலை முத்து சிற்பி, சின்னப்பொண்ணு, பிரணவம் சசி, ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீரன் திரைப்படம் வருகிற ஜுன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.