'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டர் வைரல்
|விடாமுயற்சி படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.
சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அர்ஜுனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரவ்வின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. முன்னதாக ஆரவ், கலகத்தலைவன், சைத்தான், ஓ காதல் கண்மணி, சிந்துபாத், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கதாநாயகனாகவும் கலகத்தலைவன் படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.