< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ரஜினியின் 'வேட்டையன்' படத்தின் புதிய போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
|14 Jan 2024 6:01 PM IST
இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சென்னை,
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'வேட்டையன்' படத்தின் டீசர் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.