'கொட்டுக்காளி' படத்தின் புதிய போஸ்டர் வைரல்
|'கொட்டுக்காளி' படத்தின் புதிய போஸ்டரை நடிகர் சூரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கொட்டுக்காளி'. இந்த படத்தை எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை 'கூழாங்கல்' படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேசமயம் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது. 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. படத்தின் புரோமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற 23-ந் தேதி அன்று வெளியாக உள்ளது.
இதற்கிடையில், படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதனை நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'இன்னும் நான்கு நாட்களில்' திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை குறிக்கும் வகையில் பதிவிடப்பட்டிருந்தது.