< Back
சினிமா செய்திகள்
ஜோக்கர் 2 படத்தின் புதிய போஸ்டர் வைரல்
சினிமா செய்திகள்

'ஜோக்கர் 2' படத்தின் புதிய போஸ்டர் வைரல்

தினத்தந்தி
|
20 Aug 2024 7:18 AM IST

ஜாக்குவான் பீனிக்ஸ் மற்றும் லேடிகாகா ஆகியோர் 'ஜோக்கர் 2' படத்தில் நடித்துள்ளனர்.

சென்னை,

பிரபல ஹாலிவுட் இயக்குனர் டூட் பிலிப்ஸ். இவர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோக்கர்'. இப்படத்தில் கதாநாயகனாக ஜாக்குவான் பீனிக்ஸ் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தில் நாயகனாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஜாக்குவன் பீனிக்ஸுக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தில் லேடிகாகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'ஜோக்கர்: போலி எ டியூக்ஸ்' என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 4-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்