கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ஷங்கர்
|நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன்-2'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதனிடையே படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கினார்.இந்நிலையில் 'இந்தியன்-2' படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது .
'எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன்' என்று தொடங்கும் அறிமுக வீடியோவில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கமலுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ஷங்கர் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் ,
நமது உலகநாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சேனாபதியை மீண்டும் அழைத்து வர உங்களுடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமை! நீங்கள் தொடர்ந்து எங்களை மகிழ்விப்பீர்கள், மேலும் லட்சக்கணக்கானவர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.