வரும் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'ஜெயிலர்' திரைப்படம்..!
|ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சென்னை,
ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்து காசோலை மற்றும் புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார். மேலும் நடிகர் ரஜினிக்கு BMW X7 மாடல் காரையும், காசோலையையும் வழங்கினார்.
இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி, பிரமாண்ட வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.