< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஓ.டி.டியில் வெளியாகிறது 'இறுகப்பற்று' திரைப்படம்
|31 Oct 2023 5:19 PM IST
விக்ரம் பிரபு நடித்துள்ள 'இறுகப்பற்று' திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ,
இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்தார். இந்த திரைப்படம் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படமானது நவம்பர்-6 ம் தேதி ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.