< Back
சினிமா செய்திகள்
அசோக் செல்வன், சாந்தனு நடித்த புளூ ஸ்டார் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது
சினிமா செய்திகள்

அசோக் செல்வன், சாந்தனு நடித்த 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது

தினத்தந்தி
|
1 March 2024 10:09 PM IST

திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார். கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'புளூ ஸ்டார்' திரைப்படம் இன்று அமேசான் பிரைம், டென்ட் கொட்டா உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களில் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்