< Back
சினிமா செய்திகள்
பிரமாண்டமாக வெளியாகும் அயலான் திரைப்படம்... எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு...!

Image Credits: Twitter.com/@kjr_studios

சினிமா செய்திகள்

பிரமாண்டமாக வெளியாகும் 'அயலான்' திரைப்படம்... எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு...!

தினத்தந்தி
|
23 Nov 2023 12:39 PM IST

சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஏலியன் கதைக்களத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்தப் படத்திலிருந்து 'வேற லெவல் சகோ' என்ற பாடல் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.

அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக நாடுகளிலும், அதிக திரையரங்களிலும் 'அயலான்' திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்