நேபாள நாட்டிலும் சிக்கலை சந்தித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம்
|சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்நாட்டில் ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.
காத்மண்டு,
'பாகுபலி' புகழ் பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' திரைப்படம் நேற்று (ஜூன் 16ம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகியது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பல்வேறு விமர்சனங்களை பெற்ற போதிலும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிபுருஷ் படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. அதில், கிருத்தி சனோன் நடித்திருந்த சீதா கதாபாத்திரத்தை குறிப்பிட்டு "சீதா இந்தியாவின் மகள்" என குறிப்பிட்டு இருந்தது. இந்த அங்கு நேபாளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீதா தேவியின் பிறந்த இடம் குறித்து தவறாக திரைப்படம் காட்டுவதாக எழுந்த பிரச்சினையை அடுத்து இந்த வசனத்தை அகற்ற படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதன் பிறகே அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது.
எனினும், சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்நாட்டில் ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.