< Back
சினிமா செய்திகள்
சதீஷ் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!
சினிமா செய்திகள்

சதீஷ் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!

தினத்தந்தி
|
28 April 2023 6:22 AM IST

சதீஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் நடிகர் சதீஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். அருள் சித்தார்த் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 'வித்தைக்காரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்