< Back
சினிமா செய்திகள்
சத்தமின்றி நடந்து முடிந்த குட்நைட் பட நாயகி திருமணம்
சினிமா செய்திகள்

சத்தமின்றி நடந்து முடிந்த குட்நைட் பட நாயகி திருமணம்

தினத்தந்தி
|
18 March 2024 10:03 AM IST

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மீதா ரகுநாத்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகின.

சென்னை,

'முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த நடிகை மீதா ரகுநாத். அதன் பின்னர் சென்ற ஆண்டு நடிகர் மணிகண்டனுடன் நடித்த 'குட் நைட்' திரைப்படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தார்.

இந்த படத்தில் அழகான, எளிமையான நடிப்பை வெளிப்படுத்திய மீதா ரகுநாத், இப்படிப்பட்ட மனைவி வேண்டும் என இணையவாசிகள் போட்டி போட்டுக் கொண்டு பதிவிடும் வகையில், இந்தப் படத்தின் மூலம் பிரபலமானார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மீதா ரகுநாத்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகின. ஊட்டியில் மீதாவின் சொந்த ஊரில் அவரது நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பெற்றோர் பார்த்து நிச்சயித்துள்ள மாப்பிள்ளையை மீதா திருமணம் செய்ய உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மீதா ரகுநாத்தின் திருமணம் சத்தமின்றி நேற்று இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சூழ நடைபெற்று முடிந்ததாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் இணைந்திருக்கும் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு மீதா சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்