< Back
சினிமா செய்திகள்
The Manjumel Boys actor joined the film Coolie
சினிமா செய்திகள்

'கூலி' படத்தில் இணைந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' நடிகர்

தினத்தந்தி
|
28 Aug 2024 6:28 PM IST

முதல் கதாபாத்திரத்தை 'கூலி' படக்குழு அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னை,

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக 'கூலி' உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதற்கிடையே, படத்தின் வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் நாளை மாலை 6 மணியிலிருந்து துவங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது முதல் கதாபாத்திரத்தை கூலி படக்குழு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கூலி படத்தில் இணைந்திருக்கிறார். இப்படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன்னதாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் சவுபின் சாஹிர் நடித்திருந்தார்.

மேலும் செய்திகள்