< Back
சினிமா செய்திகள்
The major update of Karthi 27 is out today evening
சினிமா செய்திகள்

இன்று மாலை வெளியாகிறது 'கார்த்தி 27' படத்தின் முக்கிய அப்டேட்

தினத்தந்தி
|
24 May 2024 12:45 PM IST

கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ஜப்பான். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை.

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். தற்காலிகமாக 'கார்த்தி 27' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கும் இரவு 7 மணிக்கும் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவித்தது.

மேலும் செய்திகள்